மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!
ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான். அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.
பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!
நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.
உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.
Facebook
Twitter
Google+

0 comments:
You can leave your opinion here.